தீபாவளி சீட்டு நடத்திய பெண் குழந்தைகளுடன் மாயம்


தீபாவளி சீட்டு நடத்திய பெண் குழந்தைகளுடன் மாயம்
x

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்திய பெண் குழந்தைகளுடன் மாயமானார்

திருச்சி

திருச்சி, திருவானைக்காவல் நெல்சன் சாலை, குழந்தைவேலு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 39). இவரது மனைவி காமாட்சி (32). தீபாவளி சீட்டு சேகரிப்பு செய்து தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக காமாட்சியிடம் சீட்டு பணம் கட்டி சேமித்து வந்தவர்கள் தீபாவளி நெருங்கி வருவதால் அதன் முதிர்வுத்தொகையோடு பணத்தை கேட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது 9 வயது மகன் மற்றும் 6 வயது மகள் ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story