சாலை பணிகளை ஆய்வு செய்த மேயர்


சாலை பணிகளை ஆய்வு செய்த மேயர்
x
திருப்பூர்

அனுப்பர்பாளையம், டிச.23-

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை, 4-வது குடிநீர் திட்டம், திருப்பூர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம்புதூர் முதல் சோளிபாளையம் வரையிலான சாலை ரூ.87 லட்சத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பு அருகே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சி மேயர்ந.தினேஷ்குமார் நேற்று திடீரென இந்த பணிகளை ஆய்வு செய்தார். அனுப்பர்பாளையம்- அங்கேரிபாளையம் சாலையில் ஒரு சில இடங்களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் விடுபட்டிருப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் மேயர் கேள்வி எழுப்பினார். மேலும் போயம்பாளையம்- பொம்மநாயக்கன்பாளையம் சாலை, குமார்நகர்- சிறுபூலுவப்பட்டி சாலை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளையும் மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மேயர், பணிகளை விரைந்து முடிக்குமாறும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், தம்பி கோவிந்தராஜ், உதவி கமிஷனர்கள் சுப்பிரமணி, கண்ணன், 11-வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், தி.மு.க. வடக்கு மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் வடுகநாதன், தி.மு.க. வார்டு செயலாளர் ரத்தினசாமி மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story