மயிலாடுதுறை ரெயில் நாளை நிறுத்தம்


மயிலாடுதுறை ரெயில் நாளை நிறுத்தம்
x
தினத்தந்தி 23 July 2023 12:45 AM IST (Updated: 23 July 2023 5:36 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மயிலாடுதுறை ரெயில் நாளை ஓடாது. பிற ரெயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மயிலாடுதுறை ரெயில் நாளை ஓடாது. பிற ரெயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை ரெயில் ரத்து

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மயிலாடுதுறை-திருச்சி-மயிலாடுதுறை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (எண்:16233 மற்றும் 16234) நாளை (திங்கட்கிழமை) ஓடாது. மேலும் பின்வரும் ரெயில்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, திருப்பாதிரிப்புலியூரில் இருந்து காலை 6 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ரெயில் (எண்:06889) லால்குடியுடன் நிறுத்தப்படும். அதுபோல் வேளாங்கண்ணியில் இருந்து காலை 7 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் ரெயில் (எண்:06839) பொன்மலையுடன் நிறுத்தப்படும். இந்த ரெயில்கள் இன்றும், நாளையும் திருச்சிக்கு வராது.

கோவை ரெயில்

இதுபோல் திருச்சியில் இருந்து மாலை 3.45 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் புறப்பட வேண்டிய ரெயில் (எண்:06890) திருச்சிக்கு பதிலாக வாளாடியில் இருந்து மாலை 4.28 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் புறப்படும். திருச்சியில் இருந்து மாலை 6 மணிக்கு விருதாசலம் புறப்பட வேண்டிய ரெயில் (எண்:06892) திருச்சிக்கு பதிலாக லால்குடியில் இருந்து மாலை 6.53 மணிக்கு விருதாசலம் புறப்படும். இந்த ரெயில்கள் திருச்சியில் இருந்து புறப்படாது.

மேலும் கோவையில் இருந்து காலை 7.15 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் ரெயில் (எண்:12084) திருச்சியுடன் நிறுத்தப்படும். இது இன்றும், நாளையும் மயிலாடுதுறைக்கு செல்லாது. அதுபோல் மயிலாடுதுறையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு கோவைக்கு புறப்படும் ரெயில் (எண்:12083) மயிலாடுதுறைக்கு பதிலாக திருச்சியில் இருந்து மாலை 4.50 மணிக்கு கோவைக்கு புறப்படும். இந்த ரெயில் மயிலாடுதுறை-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story