பூங்காக்கள் பராமரிப்பு ஆலோசனைக்கூட்டம்
பூங்காக்கள் பராமரிப்பு ஆலோசனைக்கூட்டம்
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள் மற்றும் திடல்களை பராமரிக்கும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார். இதில் மாநகராட்சி பொறியாளர் முகமது சபியுல்லா, பூங்காக்களை பராமரிக்கும் தனியார் நிறுவன உரிமையாளர்கள், பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
பூங்காக்கள் மற்றும் திடல்களை சிறப்பாக பராமரிப்பு செய்து மக்களுக்கு பயன்படும் வகையில் அமைக்க அறிவுறுத்தப்பட்டது. பராமரிப்பில் ஏதேனும் அலுவலக ரீதியான தகவல்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story