மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றினார்


மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றினார்
x

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றினார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றினார்.

சுதந்திர தினவிழா

தூத்துக்குடி மாநகராட்சியில் இந்திய நாட்டின் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். துணை மேயர் ஜெனிட்டா முன்னிலை வகித்தார். தலைமை செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ்பொன்னையா வரவேற்று பேசினார்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து, சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.

ஆக்கிரமிப்பு

அப்போது, நம் நாட்டின் சுதந்திரத்துக்காக எண்ணற்ற தலைவர்கள் தம் இன்னுயிரை தந்து நமக்கு இந்த சுதந்திரத்தை பெற்றுத் தந்துள்ளனர். அதனை நாம் பேணி காக்க வேண்டும். உள்ளாட்சித் துறையில் உறுப்பினர்கள் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை உணருகிறேன். தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு முன்னாள் நகர்மன்ற தலைவராக இருந்த குரூஸ்பர்னாந்து பல்வேறு அரிய பணிகளை செய்துள்ளார். குறிப்பாக தூத்துக்குடி நகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்தார். நம் முன்னோர்கள் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பில் இருந்து நம் நாட்டை மீட்டு கொடுத்துள்ளனர், என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, ராமசந்திரன், நகர்நல அலுவலர் அருண்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story