ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோட்டில் வாக்கு சேகரித்த சென்னை மேயர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோட்டில் வாக்கு சேகரித்த சென்னை மேயர்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் 39-வது வார்டு கே.எஸ்.நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, தி.மு.க. அரசின் சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். வாக்கு சேகரிக்கும்போது மேயர் பிரியா முரசு கொட்டி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தி கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
Related Tags :
Next Story