நெல்லை டவுனில் மேயர் ஆய்வு


நெல்லை டவுனில் மேயர் ஆய்வு
x

நெல்லை டவுனில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி மேயர்‌ பி.எம்.சரவணன் தனது வார்டான நெல்லை டவுன் 16-வது வார்டில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வார்டுக்குட்பட்ட அரசன்நகர், லாலுகாபுரம், அமிர் சாகிப்நகர், தொண்டை மான் தெரு, சிக்கந்தர் மேலத்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சென்று சேதமான வாறுகால்கள், பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதி பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்குள்ள டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறே வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது நெல்லை மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், இளநிலை பொறியாளர் பட்டுராஜன், சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.



Next Story