அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு


அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு
x

பாளையங்கோட்டையில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை 7-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார். கென்னடி தெரு, குறுக்கு தெரு, ஆசாத் தெரு பகுதியில் பாலம் அமைப்பது, திருவள்ளுவர் தெருவில் சாலை, தெருவிளக்கு, குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும் காமராஜர் நகர் பூங்காவில் மக்கள் நலச்சங்கம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மூலிகை தோட்டத்தையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கவுன்சிலர் சுந்தர், உதவி செயற்பொறியாளர் ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story