மாநில கூடைப்பந்து போட்டிக்கு ம.தி.தா. இந்து பள்ளி அணி தகுதி
மாநில கூடைப்பந்து போட்டிக்கு ம.தி.தா. இந்து பள்ளி அணி தகுதி பெற்றது.
திருநெல்வேலி
நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து பள்ளி மாணவர்கள் சங்கர்நகர் ஜெயேந்திராபள்ளியில் நடந்த குறுவட்டார அளவிலான கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதன் மூலம் அந்த அணி வருவாய் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
அதனை தொடர்ந்து வள்ளியூரில் நடந்த வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி அணியை வீழ்த்தி ம.தி.தா. இந்து பள்ளி அணி மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மாநில அளவிலான போட்டி வருகிற 8, 9, 10-ந் தேதிகளில் நாமக்கல்லில் நடக்கிறது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்விச்சங்கத்தின் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், நெல்லை மாவட்ட கூடைப்பந்து கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story