மல்யுத்த சம்மேளன தலைவருக்கு ம.தி.மு.க.வினர் வாழ்த்து


மல்யுத்த சம்மேளன தலைவருக்கு ம.தி.மு.க.வினர் வாழ்த்து
x
தினத்தந்தி 4 July 2022 12:30 AM IST (Updated: 4 July 2022 12:36 PM IST)
t-max-icont-min-icon

மல்யுத்த சம்மேளன தலைவருக்கு ம.தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்தனர்.

நாமக்கல்

கந்தம்பாளையம்;-

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்தவர் பத்மராஜா. மல்யுத்த வீரரான இவர் கடந்த 1985-ம் ஆண்டு மல்யுத்த போர்டு கமிட்டியில் பணியாற்றினார். இதையடுத்து 1990-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட மல்யுத்த தலைவராக இருந்தார்.

இந்த நிலையில் பத்மராஜா புதுடெல்லியில் நடந்த விழாவில் அகில இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து பத்மராஜனுக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் கணேசன் முன்னிலையில் வசந்தபுரம் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது ம.தி.மு.க. மாநில சட்ட திருத்தக்குழு உறுப்பினர் ரங்கசாமி மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story