பருத்தி செடியில் மாவு பூச்சி தாக்குதல்


பருத்தி செடியில் மாவு பூச்சி தாக்குதல்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் பருத்தி செடியில் ஏற்பட்டுள்ள மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் டிரேன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் பகுதியில் பருத்தி செடியில் ஏற்பட்டுள்ள மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் டிரேன் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பருத்தி சாகுபடி

கொள்ளிடம், சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால், சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் மறு சாகுபடி செய்ய முடியாத சூழல் இருந்து வந்தது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, விவசாயிகள் குறுவை சாகுபடியை குறைத்து அதிக அளவு நிலப்பரப்பில் பருத்தி சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து, பருத்தி சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சமீபத்தில் மழை பெய்தது. இதை பயன்படுத்தியும், நிலத்தடி நீரை பயன்படுத்தியும் விவசாயிகள் பருத்தி பயிரை பராமரித்து வருகிறார்கள்.

நோய் தாக்குதல்

தற்போது கொள்ளிடம், சீர்காழி பகுதியில் பருத்தி அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. பல இடங்களில் அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சூழலில் பருத்தி பயிரில் நோய் தாக்குதல் காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில். கடந்த ஆண்டு பருத்தியின் விலை ரூ.12 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையானது. அதனால் இந்த ஆண்டும் நல்ல விலை போகும் என்ற நோக்கில் பருத்தி சாகுபடியில் தீவிரம் காட்டி வந்தோம். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்தி விலை குறைந்துள்ளது. இது விவசாயிகளுக்கு வேதனையை அளிக்கிறது.

மகசூல் இழப்பு...

இந்த நிலையில் தற்போது பருத்தி செடியில் மாவு பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நோய் தாக்குதல் காரணமாக பருத்தி செடி காய்ந்து சேதம் அடைந்து வருகிறது. அதிகம் செலவு செய்து விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து உள்ளோம்.

இந்த நிலையில் பூச்சி தாக்குதல் தென்படுவதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பூச்சிகளை கட்டுப்படுத்த பருத்தி செடிக்கு மருந்து அடிக்க ஆட்கள் கிடைக்காததால் ட்ரோன் மூலம் மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.


Next Story