அனைத்து கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்


அனைத்து கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது

திருவண்ணாமலை

கால்நடைகளில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரிநோய் வராமல் தடுக்கும் வகையில் கோமாரிநோய் தடுப்பூசிப் பணி ஆண்டிற்கு 2 முறை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தற்போது கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி 3-வது சுற்று வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) முதல் 21-ந் தேதி வரை தடுப்பூசி பணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.

அனைத்து கிராமங்களிலும் இத்தடுப்பூசி போடப்படும் நாட்களில் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தவறாமல் கோமாரிநோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 சதவீதம் பணி முடித்து தடுப்பூசி போடாத மாடுகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி கோமாரி நோயை அறவே வராமல் தடுக்கவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கால்நடைகள் மூலமாக ஏற்படும் பொருளாதார இழப்பை தடுத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story