பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x

சீர்காழி பகுதியில் பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் யோசனை கூறியுள்ளார்.

மயிலாடுதுறை

சீர்காழி


பருத்திக்கு நல்லவிலை கிடைப்பதால் சீர்காழி பகுதியில் பருத்தி சாகுபடி அதிகளவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பருத்தி செடிகள் நன்கு வளர்ந்துள்ளன. ஆனால், பருத்தி செடிகளில் மாவுப்பூச்சி தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அதனை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் யோசனை கூறியுள்ளார். மாவுப்பூச்சிகள் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் குடும்ப வகையை சேர்ந்தவை. இந்தப் பூச்சிகள் கூட்டம், கூட்டமாக இலைகளுக்கு அடியிலோ அல்லது பருத்தியின் நுனியிலோ இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சும் தன்மை உடையது.

மாவு பூச்சி தாக்குதல்

அவ்வாறு தாக்கப்பட்ட செடிகள் வாடி, கருப்பு நிறமாக மாறிவிடும். இந்த பூச்சிகளின் மேல் மெழுகு போன்ற அமைப்பு காணப்படும். மாவுப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கருப்பு பூசண வளர்ச்சி அதாவது இலையிலோ அல்லது தண்டுகளின் முனையிலோ கருப்பு நிறமாக இருப்பதை காணமுடியும். அப்படி தென்பட்டால் அவை சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதாவது மாவுப் பூச்சியின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது என்பதை உணரலாம்.

கட்டுப்படுத்தும் முறை

இவற்றை கட்டுப்படுத்த தாவர பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது மீன் எண்ணெய் சோப்பு 25 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு பயன்படுத்தலாம். செயற்கை பூச்சிக்கொல்லிகள் உபயோகிப்பதாக இருந்தால் இமிடாக்குளோபிரிட் 100 மில்லி அல்லது தயமீத்தாக்சாம் 100 கிராம் ஒரு எக்டேருக்கு உபயோகப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.






Next Story