பருத்தி செடிகளை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை


பருத்தி செடிகளை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை
x

பருத்தி செடிகளை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை

தஞ்சாவூர்

பாபநாசம் பகுதிகளில் பருத்தி செடிகளை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்

பாபநாசம், வழுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை சாகுபடியாக விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பருத்தி பயிரிட்டுள்ளனர். தற்போது பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து ஒரு வார காலமாக கனமழை பெய்து வருவதால் பருத்தியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பருத்தி பயிர்கள் குறைந்த அளவே பூக்கள் மற்றும் காய்கள் கொண்டுள்ளதால் அந்தபகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உரிய நிவாரணம்

எனவே வேளாண்மைத்துறை அதிகாரிகள் உடனடியாக பருத்தி செடிகளை தாக்கும் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story