தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை


தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் நடந்த மீனவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.

கடலூர்

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ஜ.க. அறிவு சார் பிரிவு மாநில பார்வையாளர் கல்யாணராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மணிகண்டன், பொது செயலாளர்கள் சுரேஷ் பிச்சைபிள்ளை, அக்னிகிருஷ்ணமூர்த்தி, ஜீவா வினோத்குமார், பொருளாளர் மேகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொண்டு, மீனவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் பேசுகையில், மீன்வளம் மற்றும் மீனவர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கிசான் திட்டம் விவசாயிகளுக்கு உதவும் நிலையில், தற்போது மீனவர்களுக்காகவும் மத்திய அரசு அத்திட்டத்தின் மூலம் உதவுகிறது. மத்திய அரசின் மீன்வளத்துறை திட்டங்கள் அனைத்தும் மீனவர்களுக்கு கொண்டு செல்லப்படும். மேலும் இதற்கான மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவிற்கான அனைத்து விதமான உதவிகளையும் மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செய்து கொடுக்கும்

மீனவர்களுக்கு பாதுகாப்பு

மேலும் கடலூரில் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக கடலில் விடப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மீனவர்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றார்.

இதில் மாநில மீனவரணி தலைவர் முனுசாமி, மாநில செயலாளர்கள் சதிஷ்குமார், சவுந்தரராஜன், ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத்ராக வேந்திரன், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் இளையராஜா, மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் ெஜயந்தி, ஜெய்சங்கர், கடலூர் மாநகர தலைவர் திருவாசகம், மாநகர செயலாளர் சரவணன், நெல்லிக்குப்பம் நகர தலைவர் கிருபா, துணைத் தலைவர் சுரேஷ், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தலைவர் மகாலிங்கம், பண்ருட்டி தெற்கு ஒன்றிய தலைவர் சித்ரா, மேற்கு ஒன்றிய தலைவர் சந்திரபாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் வேலுவெங்கடேசன் நன்றி கூறினார்.


Next Story