பருவமழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
பருவமழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
சென்னை,
பருவமழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது ;
2,700 பில்லர் பாக்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. சீரான, தடையில்லா மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பகலில் 1,440 பேர், இரவில் 600 பேர் தொடர் பணி செய்து வருகின்றனர் .
40 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்ட்டுள்ளன .கையிருப்பில் 2 லட்சம் மின் கம்பங்கள் உள்ளன . கையிருப்பில் 18 ஆயிரம் மின் மாற்றிகள் உள்ளன .
தமிழகம் முழுவதும் 13 லட்சம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாது சீரான மின் வினியோகம் வழங்கப்படுகிறது. என தெரிவித்துள்ளார்.
"பகலில் 1,440 பேர், இரவில் 600 பேர் தொடர் பணி" - "பவர் கட்டே இருக்காது" - அமைச்சர் செந்தில் பாலாஜி #SenthilBalaji #MinisterSenthilBalaji https://t.co/FYW3HRn70T
— Thanthi TV (@ThanthiTV) November 2, 2022