சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்


சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்
x
தினத்தந்தி 3 Jun 2023 3:00 AM IST (Updated: 3 Jun 2023 3:00 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே உப்பட்டியில் இருந்து பழைய நெல்லியாளம் செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக அரசு பஸ்கள், பிற வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் மாணவ-மாணவிகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் நடந்து சென்று வருகின்றனர். இதற்கிடையே அந்த சாலையோரத்தில் ஆங்காங்கே இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. அங்கு இறைச்சி கழிவுகள் அழுகி கிடப்பதோடு, கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி நடந்து செல்கின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் மூட்டை, மூட்டையாக இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதை உண்பதற்காக சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் வந்து செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, பழைய நெல்லியாளம் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story