குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த மெக்கானிக் சாவு


குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த மெக்கானிக் சாவு
x

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த மெக்கானிக் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் முருகன் (வயது 24) மெக்கானிக். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாட்டறம்பள்ளி அருகே கள்ளியூர் தீத்தான் கொல்லை பகுதியைச் சேர்ந்த நண்பர் சாந்தகுமார் என்பவரது வீட்டிற்கு சென்றார்.

அங்கு வீட்டு அருகே இருந்த சாந்தகுமாருக்கு சொந்தமான 3 அடி ஆழமுள்ள குடிநீர் தொட்டியை முருகன் எட்டி பார்த்தார். அப்போது குடிநீர் தொட்டியில் தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு மயங்கி விழுந்தார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தந்தை ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story