கருங்கல் அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை


கருங்கல் அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
x

கருங்கல் அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே சகாயநகர் பகுதியைச் சேர்ந்த தேவசகாயம் மகன் ஜோசப் சேவியர் பென்ஸ் (வயது 36). மெக்கானிக்கான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. பின்னர் ஜோசப் சேவியர் பென்ஸை விட்டு அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார். இதற்கிடையே ஜோசப் சேவியர் பென்ஸ் கடந்த 10 மாதமாக காலில் ஏற்பட்ட புண்ணால் அவதிப்பட்டார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

--


Next Story