மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சூசை ஸ்டீபன் தேவராஜ் (வயது 35). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரூத் இவாஞ்சலின் (21) என்கிற மனைவியும், ஒரு வயதில் தியோ ஸ்டீபன் என்கிற ஆண் குழந்தையும் உள்ளனர். சூசை ஸ்டீபன் தேவராஜ் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே மின் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மேலும் அவர் நான்கு ரோடு பகுதியில் உள்ள டிராக்டர் ரோட்டவெட்டர் ஏஜென்சியில் மெக்கானிக்காக கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். அவருடைய மனைவி திருச்சி உறையூரில் உள்ள ஆன்லைன் டிரேடிங் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் ரூத் இவாஞ்சலின் வேலைக்கு சென்று விட்டார். அவர் வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது மொட்டை மாடியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் இரும்பு படிக்கட்டில் கயிற்றில் சூசை ஸ்டீபன் தேவராஜ் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த ரூத் இவாஞ்சலின் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சூசை ஸ்டீபன் தேவராஜை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சூசை ஸ்டீபன் தேவராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. சூசை ஸ்டீபன் தேவராஜின் தற்கொலைக்கான காரணம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.