தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை


தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை
x

தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஈகை நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டு குளியலறையில் துண்டால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரமேஷ் மனைவி சாவித்திரி (31) கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story