தொடர்மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் எந்திரம் மூலம் அறுவடை


தொடர்மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் எந்திரம் மூலம் அறுவடை
x

தொடர்மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் எந்திரம் மூலம் அறுவடை

தஞ்சாவூர்

மெலட்டூர்

மெலட்டூரில் தொடர்மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைநீரில் மூழ்கி பயிர்கள் சாய்ந்தன

பாபநாசம் தாலுகா மெலட்டூர், தேவராயன்பேட்டை, பொன்மான்மேய்ந்தநல்லூர், கிடங்காநத்தம், கோடுகிளி உள்பட பல பகுதியில் குறுவை முன்பருவத்தில் நடவு செய்யப்பட்டது. தற்போது அறுவடை செய்ய வேண்டிய பல ஏக்கர் நெற்பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் வயல்களில் சாய்ந்தும், மழைநீரில் மூழ்கி நெல்மணிகள் முளைக்க தொடங்கியது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற விவசாயிகள் வடிகால்கள் மூலம் தண்ணீரை வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மழையில் சேதமடைந்த நெற்பயிர்களை அறுவடை எந்திரங்கள் மூலம் விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய இழப்பீட்டு தொகை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக பெய்த மழைநீரில் மூழ்கின.

இதனால் நெல்மணிகள் முளைக்க தொடங்கின. இனிவயலில் நெற்பயிர்களை விட்டு வைத்தால் எல்லாம் முளைத்து நாற்று வந்து விடும். எனவே அறுவடை செய்து கிடைத்த வரையில் நெல்லை கரைசேர்க்க நெற்பயிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்து வருகிறோம். இந்த ஆண்டு குறுவை முன் பருவத்தில் சாகுபடி செய்த விவசாயிகள் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story