மத்திய அரசின் பதக்கம் பெறும் கிருஷ்ணகிரி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்


மத்திய அரசின் பதக்கம் பெறும்  கிருஷ்ணகிரி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர்
x

கிருஷ்ணகிரி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மத்திய அரசின் பதக்கம் பெறுகிறார்.

கிருஷ்ணகிரி

தர்மபுரி குமாரசாமிபேட்டையை சோந்தவர் எஸ்.சசிகலா. இவர் கடந்த 2004-ம் ஆண்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரிந்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நியமிக்கப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில், 14 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தந்துள்ளார். வழக்குகளில் புலனாய்வு செய்ததில் திறமையாக செயல்பட்டதால் உள்துறை அமைச்சகத்தின்‌ மூலம் சிறந்த புலனாய்வுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.


Next Story