தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமுகாம்


தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமுகாம்
x

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமுகாம்

திருப்பூர்

அவினாசி

அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் 134 தூய்மை பணியாளர்கள் உள்ளனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு நேற்று பொது மருத்துவ முகாம் நடந்தது.

இதில் சர்க்கரை, ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி போன்றவற்றினை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து மருந்துகள் வழங்கப்பட்டது. முகாமினை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தொடங்கிவைத்தார். செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் சேவூர் பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் டாக்டர் சந்திரன், சித்த மருத்துவர் யாகசுந்தரம் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.


Related Tags :
Next Story