மருத்துவ மாணவர்சேர்க்கை - ஜூலை 16ல் தகுதிப்பட்டியல் வெளியீடு


மருத்துவ மாணவர்சேர்க்கை - ஜூலை 16ல் தகுதிப்பட்டியல் வெளியீடு
x

மருத்துவ மாணவர்சேர்க்கைக்கான தகுதிப்பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்படும்.

சென்னை,

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.

அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு ஜூன் 28ம் தேதி தொடங்கியது. ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 12-ம் தேதி மாலை 5 மணி வரை இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் மா. சுப்ரமணியன் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்படுவது குறித்து அறிவித்துள்ளார்.

வரும் ஜூலை16 ஆம் தேதி காலை 10 மணியளவில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்க்கான தகுதி பட்டியல் வெளியிடப்படும். இதற்க்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு வெளியாக இன்னும் 10 நாட்கள் ஆகலாம் என்பதால் இப்பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story