பழையனூரில் மருத்துவ முகாம்
பழையனூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியனை சேர்ந்த பழையனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டம் யூனியன் தலைவர் சின்னையா தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு அனைவரையும் வரவேற்றார். வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, நோயாளிகளுக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
முகாமில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ், மாவட்ட குடும்ப நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் யோகவதி, யூனியன் துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பையா, ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, பழையனூர் சந்தனம், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 756 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 42 பெண்களுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டும், 46 பேருக்கு இ.சி.ஜி.யும், 52 பேருக்கு எக்ஸ்-ரேயும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இதய நோய், காது, மூக்கு, தொண்டை பிரிவு, மகப்பேறு, குழந்தைகள் நலம், தோல் பிரிவு உள்பட பல பிரிவுகளின் சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்்சை அளித்தனர்.