மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
x

நல்லம்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஸ்வரி மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவதற்கான ஆலோசனை, தேசிய அடையாள அட்டை பெறுதல், நலவாரியத்தில் பதிவு செய்தல், அரசின் நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் பெற ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவக்குழுவினர் கண் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்தனர்.


Next Story