இலவச சிறப்பு மருத்துவ முகாம்


இலவச சிறப்பு மருத்துவ முகாம்
x
திருப்பூர்


மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர்அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

இந்த முப்பெரும் விழாவிற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தி.மு.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.விஸ்வலிங்கசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திருப்பூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சங்கவி, பெருமாநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நித்யா முருகேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், ஊராட்சி மன்ற 9-வது உறுப்பினர் முகமது இத்ரீஸ், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரபிதீன், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணக்குமார், முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் எச்.ரபிதீன், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அப்துல்பாரி, மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story