மருத்துவ முகாம்


மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேலஇலந்தைகுளத்தில் மருத்துவ முகாம் நடந்தது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தைகுளத்தில் ஊராட்சி மன்றம் சுஸ்லான் பவுண்டேஷன் மற்றும் சன் பவுண்டேஷன் ஆகியவை சார்பில் நோய் கண்டறிதல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலஇலந்தைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஸ்டெல்லா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆறுமுகத்துரை, டாக்டர் ஷேக் மைதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சுஸ்லான் பவுண்டேசன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி வரவேற்று பேசினார். இதில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் வலிகள் குறித்து சிறப்பு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் முத்துப்பாண்டியன் நன்றி கூறினார்.



Next Story