வடசிறுவள்ளூரில் மக்களைதேடி மருத்துவ முகாம்
வடசிறுவள்ளூரில் மக்களைதேடி மருத்துவ முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் எக்ஸ்ரே எடுக்கும் முகாம் நடைபெற்றது.
இதற்கு டாக்டர் சுகன்யா தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் குமாரி பன்னீர்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியபாமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் பாசில் வரவேற்றார். முகாமில் 50 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் இலியாஸ்கான், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் துரைராஜ் மற்றும் ஆய்வகநுட்புநர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story