கிருஷ்ணகிரியில் அரசுத்துறை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்-மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் அரசுத்துறை பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இந்த மருத்துவ முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து, பரிசோதனை செய்துகொண்டார்.
முகாமில், பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், தோல், காது, மூக்கு, தொண்டை, கண் நோய், ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடுகள் சிகிச்சை மற்றும் இ.சி.ஜி. பரிசோதனை, சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உயர் சிகிச்சைக்கு பரிந்துரை
மேலும் டாக்டர்களால் மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள், உயர் சிகிச்சைக்கு தேவையான பரிந்துரைகள், மருந்துகள் வழங்கப்பட்டன.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார், தொற்றாநோய் அலுவலர் டாக்டர் திருலோகன், டாக்டர்கள் சுசித்ரா, செல்வி, விமல்குமார், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தமிழ்வாணன், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) ராமச்சந்திரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.