சிறப்பு மருத்துவ முகாம்
சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இளையான்குடி
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு அலுவலர்கள், ஊராட்சி அளவிலான பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொள்ளும் சிறப்பு மருத்துவ முகாம் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி துறை சார்பாக நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜய் சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அனைவருக்கும் சித்த மருத்துவ குழுவினர் இயற்கை உணவு வழங்கி, இயற்கை உணவுக்கான உணவுப் பொருட்கள் கண்காட்சியில் வைத்திருந்தனர். முகாமில் 302 பயனாளிகள் பங்கேற்றனர். அப்போலோ மருத்துவமனை தலைமை மருத்துவர் கோகுல் கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த பரிசோதனை, எகோ பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனைகள் செய்து உடனடி மருந்துகள் வழங்கி மேல் சிகிச்சைக்கான பரிந்துரைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜன், தமிழ்மாறன், பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், செயல் அலுவலர் கோபிநாத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி துறை பணியாளர்கள், மருத்துவ துறை அலுவலர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாட்டினை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ மற்றும் மருத்துவத்துறையினர் செய்திருந்தனர்.