தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
செங்கோட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது
தென்காசி
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் வைத்து செங்கோட்டை நகராட்சி - நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் நகராட்சி துாய்மை பணியாளா்களுக்கு சிறப்பு புற்றுநோய் தடுப்பு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். ஆணையாளா் (பொ) ஜெயப்பிரியா, சுகாதார ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலா் பழனிச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னா் பஸ் நிலையம் மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டது.
பின்னர் மருத்துவ முகாமை நடமாடும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை - நெல்லை புற்றுநோய் மருத்துவ மையம் இணைந்து நடத்தினர்.
Related Tags :
Next Story