கால்நடை சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம்


கால்நடை சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழ காஞ்சிரங்குளம் கிராமத்தில் கால்நடை சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழ காஞ்சிரங்குளம் கிராமத்தில் கால்நடை சிறப்பு தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவள்ளி தர்மராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். கால்நடை உதவி இயக்குனர்கள் சிவக்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, வினிதா ஆகியோர் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கால்நடை ஆய்வாளர்கள் வீரன், முனீஸ்வரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செந்தில்வேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


Next Story