மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை சார்பில் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிவகங்கை

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை சார்பில் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் வரவேற்றார். சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டாட்சியர் சாந்தி, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய துணைத்தலைவர் சரண்யா ஸ்டாலின் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு ஆகியோர் குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். மருத்துவ முகாமில் தேசிய அடையாள அட்டை 46 பேருக்கும், 98 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கான பதிவும் மேற்கொள்ளப்பட்டது. 78 பேருக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது. 19 பேரிடம் குறைகள் தொடர்பான மனுக்களும் 24 பேரிடம் மாதாந்திர உதவித் தொகைக்கான மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் மொத்தம் 192 மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்றனர். சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஊன்றுகோல்,, காதொலி கருவி ஆகியவை வழங்கப்பட்டது.


Next Story