பொது மருத்துவ முகாம்
பொது மருத்துவ முகாம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தொண்டு நிறுவன உதவி இயக்குனர் விஜயா குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். திருவாரூர் மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் லெனின், டாக்டர் லாவண்யா ஆகியோர் மூட்டு வலி, சக்கரை நோய் உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களை கண்டறிந்து மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரி, திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரிந்துரைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாக்யராஜ், செயலாளர் புவனேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, சக்தி பிரியா, சரண்யா, பிரியா, சரவணன், சந்தோஷ் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.