மருத்துவ முகாம்
முத்துப்பேட்டை அருகே மருத்துவ முகாம் நடந்தது.
திருவாரூர்
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த ஓவரூர் கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேம்சந்்த் காந்தி உத்தரவின் படி காய்ச்சல் தடுப்பு பணி நடந்தது. இதில் கிராமங்கள் முழுவதும் நோய் பரப்பும் வகையில் ஆங்காங்கே கிடந்த தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் அரசு டாக்டர் பாலதண்டாயுதபாணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், பாலசண்முகம், தலைமை ஆசிரியர் அன்பழகன் கிராம சுகாதார செவிலியர் கலைமணி, இடை நிலை சுகாதார பணியாளர் பிரியதர்ஷி மற்றும் அங்கன்வாடி பணியாளர் செல்வி, மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story