இலவச கண் மருத்துவ முகாம்
இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது
காளையார்கோவில்,
காளையார்கோவிலில் உள்ள சுதந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில்இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு காரைக்குடி லயன்ஸ் கிளப் தலைவர் அசோகன் தலைமை தாங்கினார்.கல்லூரியின் தலைவர் பொறியாளர் முத்து முன்னிலை வகித்தார். லயன்ஸ் கிளப் மண்டல தலைவர் தண்ணீர் மலை, வட்டாரத்தலைவர் வைரவன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். கல்லூரியின் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சரவணன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமை சுதந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்குடி லயன்ஸ் கிளப், மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின. முகாமிற்கான ஏற்பாடுகளை முதல்வர் பூப்பாண்டி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.