இலவச மருத்துவ முகாம்
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள அறிவமுது அறக்கட்டளை மற்றும் பொன்னமராவதி ஸ்ரீதுர்க்கா அறுவை சிகிச்சை நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி, சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர அவைத்தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக துர்க்கா மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் அழகேசன், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் மகப்பேறு மருத்துவர் இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். மருத்துவ முகாமில் ரத்தசோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், பெண்களுக்கான பொது மருத்துவம், மற்றும் கர்ப்பப்பை பரிசோதனை, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் 500-க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர். இதில் சிங்கம்புணரி தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், அ.தி.மு.க. நகர செயலாளர் வாசு, அ.தி.மு.க. மாவட்ட இளைஞரணி மற்றும் இளம்பெண் பாசறை துணை செயலாளர் ஸ்டாலின், சிங்கம்புணரி ஒன்றிய துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில இலக்கிய அணி சிங்கை தர்மன், காங்கிரஸ் நகர தலைவர் தாயுமானவன், ஆர்.எம்.எஸ். புசலியம்மாள் மருத்துவமனை மருத்துவர் அருள்மணி நாகராஜன், ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், முன்னாள் கவுன்சிலர் கதிர்காமம், தி.மு.க. பேச்சாளர் உதயகுமார், கிராம அம்பலம் சத்தியசீலன், ஆர்.எஸ். எஸ். தாலுகா பொறுப்பாளர் குகன், கோவில் நிர்வாக மேற்பார்வையாளர் தண்ணாயிரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகம் அறங்காவலர் குழு தலைவர் வெள்ளை முத்துகிருஷ்ணன் மற்றும் பொன்னமராவதி துர்க்கா அறுவை சிகிச்சை நிலையத்தினர் செய்திருந்தனர்.