தூய்மை காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
தூய்மை காவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு திருவாரூர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை திட்ட அலுவலர் சந்திரா முன்னிலை வகித்தார். முகாமை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன், அமைச்சர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து 51. புதுக்குடியில் ரூ.4 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் சமத்துவபுர வீடுகள் சீரமைப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டார். அப்போது ஊராட்சி உதவி இயக்குனர் பொன்னியின் செல்வன், ஒன்றியக்குழு தலைவர் கிளாராசெந்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாப்பா சுப்பிரமணியன், சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், சாமிநாதன், வட்டார மருத்துவ அலுவலர் ஜெகதீஸ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜோதிராமன், பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.