பிறவி இருதய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்


பிறவி இருதய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பிறவி இருதய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட தொடக்க நிலை இடையூட்டு சேவை மையத்தின் சார்பில் பிறவி இருதய குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மேல் சிகிச்சைக்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கி முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமரன், இருதய நல மருத்துவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 150 குழந்தைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 22 குழந்தைகளுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இதில் டாக்டர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story