மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
உளுந்தூா்பேட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை,
மாற்றுத்திறனாளி நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் முத்துசாமி, கீதாலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நவநீதம், சதா, வெங்கடேஷ், ரம்யா, ராதா மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தனர். இதில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் காசிலிங்கம், அரசு, சுரேஷ், ரம்யா, சரிதா, ஆறுமுகம் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் கோமதி, ஜானகிராமன், ராஜலட்சுமி, சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.