மாற்றுதினாளிகளுக்கான மருத்துவ முகாம்


மாற்றுதினாளிகளுக்கான மருத்துவ முகாம்
x

திருப்பத்தூரில் மாற்றுதினாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்தினாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு 91 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 61 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, 10 பேருக்கு ஆதார் அட்டை, 10 பேருக்கு காலிப்பர்களை வழங்கி பேசினார்.

இதில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, மனநல மருத்துவ அலுவலர் பிரபாவராணி, குழந்தைகள் நல மருத்துவர் தமிழரசன், டாக்டர்கள் தன்வீர்அஹமத், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story