போலீசாருக்கான மருத்துவ முகாம் இன்று நடக்கிறது


போலீசாருக்கான மருத்துவ முகாம் இன்று நடக்கிறது
x

திருப்பத்தூர் மாவட்டபோலீசாருக்கான மருத்துவ முகாம் இன்று நடக்கிறது

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டபோலீசாருக்கான மருத்துவ முகாம் இன்று நடக்கிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கான மருத்துவ முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருப்பத்தூர் நந்தினி மஹாலில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. முகாமை கலெக்டர் அமர்குஷ்வாஹா, க.தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்து பேசுகின்றனர். முகாமில் அனைத்து விதமாக மருத்துவபரிசோதனைகளும் செய்யப்பட உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு பயன் அடையுமாறு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story