தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்


தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
x

தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆலங்குடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்குள்ள தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ராசி முருகானந்தம் தலைமை தாங்கினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரேவதி, புதுக்கோட்டை தணிக்கை ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் அரசு மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ரத்த கொதிப்பு, சர்க்கரை மற்றும் இதர நோய்களுக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதில், தூய்மை மேற்பார்வையாளர் ராஜேந்திரன் பிட்டர் குமார், திருவரங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story