மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
x

திருவாடானையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் மாதாந்திர உதவித்தொகை, வங்கி கடன்கள், வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு அரசின் சலுகைகளை பெறுவதற்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முகாமில் மத்திய அரசின் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் செயற்கை கால் ஊன்றுகோல், மூன்று சக்கர மோட்டார் சைக்கிள், வீல்சேர், காதொலி கருவிகள் போன்ற பல்வேறு உபகரணங்கள் பெறுவதற்கும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முகாமில் திருவாடானை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாந்தி, முடநீக்கு வல்லுனர் ஜெய்சங்கர், மருத்துவர்கள் பிரபாகரன், தீர்த்தனா, சந்தியா, பிரியதர்ஷினி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சண்முகப்பிரியா, டிசம்பர் 3 இயக்க மாநில தலைவர் வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story