மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் அரியலூரில் இன்று நடக்கிறது


மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் அரியலூரில் இன்று நடக்கிறது
x

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் அரியலூரில் இன்று நடக்கிறது.

அரியலூர்

அரியலூர்

அரியலூர் மாவட்டதில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கிடவும் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாதந்தோறும் 2, 4-ம் வியாழக்கிழமைகளில் அனைத்து டாக்டர்களை கொண்டு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மாதத்தில் 2-ம் வியாழக்கிழமையான இன்று அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மருத்துவ முகாமிற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், முகம் மட்டும் தெரியும் படியான புகைப்படம்-4 ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து பயனடையலாம். இந்த தகவல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story