பெண்களுக்கு மருத்துவ முகாம்


பெண்களுக்கு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் பெண்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகளை காந்திராஜன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை, மார்பக பரிசோதனை, ரத்தசோகை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் மும்பையை சேர்ந்த சிறப்பு டாக்டர், தமிழகத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற பெண் டாக்டர்கள் கலந்துகொண்டு பெண்களை பரிசோதிக்க உள்ளனர். இந்த மருத்துவ முகாம் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து காந்திராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், பேரூராட்சி தலைவர் மேகலா, நகர தி.மு.க. செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், பாகநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திரவியராஜ், ஒன்றிய பிரதிநிதி மணிமாறன் மற்றும் பலர் இருந்தனர்.


Next Story