மேலூர் பகுதியில் மருத்துவ முகாம்
மேலூர் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மதுரை
மேலூர்
மேலூர் பகுதியில் நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. வட்டார மருத்துவ அலுவலர் சண்முகப்பெருமாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜாபர், டாக்டர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கிராம புறங்களில் மக்களைத்தேடி சென்று சிகிச்சை அளித்தனர். தும்பைபட்டி, கம்பூர், லெக்கடிபட்டி, வெள்ளலூர், திருவாதவூர், தெற்குதெரு உள்பட பல்வேறு கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. தேவையான நபர்களுக்கு காய்ச்சல் தடுப்பு ஊசி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
Related Tags :
Next Story