பொட்டல்புதூரில் மருத்துவ முகாம்
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொட்டல்புதூர் ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடந்தது.
கடையம்:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளிசங்கர் மேற்பார்வையில், கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொட்டல்புதூர் ஆர்.சி. பள்ளி வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு பஞ்சாயத்து துணைத்தலைவர் துரை தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் செல்லம்மாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனிகுமார் தலைமையில் டாக்டர்கள் டேவிஸ்கிருபாகரன், பாண்டியராஜா, முபாரக், கோமதிசங்கர், ஜாஸ்மிஸ் ஆகியோர் மருத்துவ சிகிச்சை அளித்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை, பொது மருத்துவ ஆலோசனை மற்றும் நீரிழிவு, ரத்த அழுத்த பரிசோதனை நடந்தது. ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தன் மற்றும் கடையம் வட்டார சுகாதார துறையினர் செய்து இருந்தனர்.